சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறிவைக்கும் மாஸ் ஹீரோக்கள்.. ரஜினி என்ற ஒற்றை மனிதருக்கு இருக்கும் பவர்

பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்து காட்டி வரும் ரஜினி உலக அளவில் பிரபலமான நபர்களில் முக்கியமானவர். வெளிநாடுகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர் ஜெயலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் இடத்தை பிடிக்க பல நடிகர்களும் போராடி வருகின்றனர். மேலும் கோலிவுட்டில் புரட்சித் தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன் என ஏகப்பட்ட பட்டங்கள் இருக்கிறது. ஆனால் அந்த இடத்திற்கு எல்லாம் இதுவரை எந்த நடிகரும் போட்டி போட்டது கிடையாது.

ஆனால் தற்போது டாப்பில் இருக்கும் மாஸ் நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு தான் போட்டி போட்டு வருகின்றார்கள். அதனாலேயே விஜய், அஜித் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் ரஜினியின் பாணியை மறைமுகமாகவோ, நேரடியாகவோ பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட வாரிசு மற்றும் துணிவு படத்தின் பிரமோஷன் சூப்பர் ஸ்டார் பட பாணியில் தான் இருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் பல நடிகர்களும் அந்த பட்டத்திற்காக போட்டி போடுகின்றனர். உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்காக மட்டுமே இந்த போராட்டம் நடக்கவில்லை. ரஜினி என்ற ஒற்றை மனிதரின் பவர் தான் இந்த போட்டிக்கு காரணமாக இருக்கிறது. ஏனென்றால் பாலிவுட் ஹீரோக்களை காட்டிலும் ரஜினிக்கு தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் பாலிவுட் ஹீரோக்களே கூட ரஜினி தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமானவர் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அப்படிப்பட்ட ஆளுமையுடன் இருக்கும் இவருடைய இடத்தை பிடிப்பதற்கு பலரும் போட்டி போடுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனாலும் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதே நிதர்சனம்.

இருப்பினும் இந்தப் போட்டி கோலிவுட்டில் தொடர்கதையாக தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்களும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று வளரும் இயக்குனர்கள் கூட இவரை வைத்து ஒரு படத்தையாவது எடுத்து பிரபலமாகி விட வேண்டும் என்று போட்டி போட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ரஜினி திரை உலகில் இன்றியமையாத ஒரு அந்தஸ்துடன் இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →