Kavin : மே 10 தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. கவினின் ஸ்டாருக்கு டஃப் கொடுக்கும் கலக்கல் ஹீரோ

கடந்த வாரம் தியேட்டரில் சுந்தர் சி யின் அரண்மனை 4 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை மே 10ஆம் தேதி கிட்டத்தட்ட ஐந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளி ஆகிறது. இதுவரை நடித்திராத வித்தியாசமான பரிமாணத்தில் கவின் இந்த படத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக டாடா படத்தை தாண்டிய வெற்றி இந்த படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ரசவாதி படம். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் அ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்போது இந்த படம் திரையரங்கு ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

ஸ்டார் படத்துக்கு போட்டியாக வெளியாகும் சந்தானம் படம்

அமீர், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் உயிர் தமிழுக்கு என்ற படம் மே பத்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் ஆதம் பவா. மேலும் உயிர் தமிழுக்கு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது

சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இங்க நான்தான் கிங்கு என்ற படம் உருவாகி இருக்கிறது. அதாவது திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞன் கல்யாணத்திற்கு பிறகு என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை.

கவின் ஸ்டார் படத்திற்கு இந்த படம் டப் கொடுக்கும் என்று தெரிகிறது. ராஜேஷ் இயக்கத்தில் சிக்கல் ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயவன் வேட்டை படமும் அதே நாளில் வெளியாகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →