இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்கள்.. தியேட்டரில் காற்று வாங்கிய மிர்ச்சி சிவாவின் சுமோ

May 23 OTT Release Movies : இந்த வாரம் தியேட்டரில் விஜய் சேதுபதியின் ஏஸ் படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் மே 23 ஓடிடியில் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் தான் சுமோ. இந்த படம் தியேட்டரில் காற்று வாங்கிய நிலையில் இப்போது சன் நெக்ஸ்ட் மற்றும் டென்ட் கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

பிரேம்ஜி அமரன், திவ்யதர்ஷினி, தீபா ஷங்கர் ஆகியோர் நடிப்பில் வல்லமை படம் ஏப்ரல் 25 வெளியானது. இந்த படம் வந்த சுவடே தெரியாத நிலையில் இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

மே 23 ஓடிடியில் வெளியாகிய படங்கள்

பாவனா நடிப்பில் திகில் நிறைந்த படமாக ஹண்டர் வெளியானது. இந்த படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ஹார்ட் பீட் சீசன் 2 தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் உருவான அபிலாசம் படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் Air Force Elite Thunderbirds, Care Bears Unlock The Magic, Sneaky Links Dating After Dark, Night Swim, Siren ஆகிய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ ஹாட் ஸ்டார் இல் ஹார்ட் பீட் சீசன் 2 தொடரும் ஸ்ட்ரீமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை ஓடிடியில் வெளியாகி இருக்கும் படத்தினை பார்த்து நேரத்தை செலவிடலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →