நாகர்ஜுனா வீட்டு மருமகளாகும் மிஸ் இந்திய.. விஜய் கூட வேற லெவல் குத்தாட்டம் போட்ட நடிகை..

நாகார்ஜூனா வீட்டு மருமகளாக போகிறார் மற்ற ஒரு நடிகை. இவர் மிஸ் இந்திய பட்டம் வென்றவர். இவர் தமிழில் நடிகையாகும் முன்னே, அவுட் ஆஃப் லவ் எனும் வெப் சீரிஸில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடங்கினார். இதன் பிறகு, இச்சாடா வாகனமுலு நிலுப ராடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நாகார்ஜூனாவின் சகோதரி மகன் அக்கினேனி சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

முதல் படத்திலேயே இவர்களுக்குள் காதல் பற்றி எறிந்துள்ளது. தற்போது, நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் திருமண வேலைகள் முடியட்டும் பின், இவர்களது திருமணம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனராம்.

விஜய் கூட வேற லெவல் குத்தாட்டம் போட்ட நடிகை

நடிகையாக மக்களுக்கு பரிட்சையமான மீனாட்சி சௌத்ரி ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பல் மருத்துவப் படிப்பை முடித்துள்ள இவர், நீச்சல் மற்றும் பேட்மின்டன் வீராங்கனையாகவும் வலம் வந்தார். அதன் பிறகு மிஸ் இந்தியா பட்டம் பெற்றார்.

தமிழில் கொலை எனும் விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமானவர் தான் மீனாட்சி சௌத்ரி. இவர், இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் அவரது மனைவியாகவும், விஜய்யின் கோட் படத்தில் மகனாக வரும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து விஜயுடன் வேற லெவல் குத்தாட்டம் போட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் கூட துல்கரின் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்தார். இப்படி கொடிகட்டி பறக்கும் நேரத்தில் கால் கட்டு போட முடிவு செய்துவிட்டார்கள் குடும்பத்தினர்.

vijay-meenakshi
vijay-meenakshi
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment