தம்பியை தூக்கிவிட்ட மோகன் ராஜா.. ஜெயம்ரவியின் பிளாக்பஸ்டர் 3 படங்கள்

ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாகவும், ஆக்சன் நாயகனாகவும் ஜெயம்ரவி வலம் வருகிறார். நடிகர் ஜெயம் ரவி வாழ்க்கையில் மோகன் ராஜா என்ற பெயர் இல்லை என்றால் ஜெயம் ரவி என்ற நடிகரும் வலம் வந்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு அண்ணனும், இயக்குனருமான மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து ஹிட்டான திரைப்படங்கள் மூன்று திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

ஜெயம் : ஜெயம்ரவியின் முதல் திரைப்படமான இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கினார். சதா, நளினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 2002ஆம் ஆண்டு தெலுங்கில் எடுக்கப்பட்ட ஜெயம் திரைப்படத்தின் ரீமேக்காகும். இத்திரைப்படத்தில் வெளியான இசைக்கும்,காதல் காட்சிக்கும் இன்றுவரை ரசிகர்கள் அதிகம். இத்திரைப்படத்தில் ரவி என்ற பெயரிலேயே அறிமுகமான ரவி படத்தின் வெற்றிக்கு பின் தனது பெயரையே ஜெயம்ரவி என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி : சாக்லேட் பாயாக இருந்த ஜெயம்ரவியை ஆக்க்ஷன் நடிகனாக இயக்குனர் மோகன் ராஜா இப்படத்தில் உருவாகியிருப்பார். ஜெயம் ரவி,  அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அம்மா சென்டிமென்ட், அழகான காதல் காட்சிகள், ஸ்ரீகாந்த் தேவாவின் வைரலாகும் இசை என இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் இன்றுவரை ஜெயம் ரவியின் ரசிகர்கள் தூக்கி கொண்டாடும் திரைப்படங்களாகும்.

தனி ஒருவன் : ஜெயம் ரவிக்கு மார்க்கெட் இல்லை அவ்வளவுதான் காலி என தமிழ் சினிமா ஓரம் கட்டிய தருணத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம், ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையை புரட்டிப்போட்டது. நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஹிப் பாப் தமிழா ஆதி இசையமைத்திருப்பார். தனி ஒருவன் திரைப்படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர்பீஸ் என்று சொல்லும் அளவிற்கு படம் வரவேற்கப்பட்டிற்கும்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை வேறுவிதமாக மாறியது. அதற்கு அடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தனி ரகமாக இருந்தது இதுவரை ஜெயம் ரவியை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது வேறு மாதிரியாக பார்க்க முடிகிறது. நடிப்பில் அவ்வளவு ருசி அனுபவம் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக மாறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் வாழ்க்கை இன்னும் பிரகாசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவர் பொருந்த மாட்டார் என்று நினைத்த பொழுது அதை வெற்றியாக மாற்றிக் காட்டியவர். ஜெயம் ரவி சினிமா வாழ்க்கையில் இல்லை இனிமேல் அவர் நடிக்க முடியாது என்று நினைக்கும் போதெல்லாம் மோகன்ராஜா அவருக்கு பக்கத் துணையாக இருந்து இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய வைத்துள்ளார். அனைத்துப் பெருமையும் அண்ணன் மோகன்ராஜா சேரும் என்று அவரே கூறியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →