விஜய்யை குறை சொல்லி அலையும் ஒரு கூட்டம்.. எது செய்தாலும் குத்தமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டி வரும் நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

ஆனால் அவர் தன் அரசியல் பயணம் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தற்போது அமைதி காத்து வருகிறார். எந்த அளவுக்கு இவரை நேசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு இவரை வெறுத்து பேசும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் இவர் எது செய்தாலும் அதை குறை சொல்வதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பல வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது விஜய் பற்றிய ஒரு கருத்தை அவரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். அதாவது விஜய் ஏதாவது ஒரு அவார்ட் வாங்கினால் அதை அவரைப் பிடிக்காதவர்கள் சாதாரண அவார்டு என்று கூறுவார்கள் என்றும், அவருடைய படத்தை லாஜிக் இல்லாத படம், காப்பி என்று பிறர் பொறாமையில் கூறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர் ஏதாவது ஒரு பிரச்சினையில் தலையிடாமல் இருந்தால் கோடியில் புரளும் நடிகன் மக்கள் பிரச்சினையில் வாய் திறக்கவில்லை என்று கூறுவார்கள். எதற்காவது குரல் கொடுத்தால் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று கூறுவார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு படம் நடித்தால் எங்க மதத்துக்கு எதிராக இருக்கிறது என்று பிரச்சினை செய்வார்கள்.

இப்படி அவரை குறை சொல்வதற்கு என்று ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் எல்லா விஷயத்திலும் ஜெயித்து கொண்டுதான் இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் அவரை பற்றி பெருமையாக கூறியிருக்கின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →