ஹீரோவா ஏத்துக்கோங்கன்னு ரிலீஸ் டேட் அறிவித்த குக் வித் கோமாளி புகழ்.. சூரி அண்ணனுக்கு சவால் விடும் தம்பி

Mr. Zoo Keeper release date announced by Komali pugazh: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்றவர் புகழ்.

சின்னத்திரையில் இவரது டைமிங் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை என்னும் அளவுக்கு காமெடிக்கு பஞ்சம் வைக்காமல் தனது உடல் மொழியாலும் கவுண்டர் காமெடிகளாலும் அதிக ரசிகர்களை பெற்றிருந்தார்.

சின்னத்திரையில் புகழ்பெற்ற கையோடு வெள்ளி திரையிலும் யானை, எதற்கும் துணிந்தவன், அயோத்தி போன்ற படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்தார்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அறிமுகமான சூரி தற்போது காமெடியை தவிர நாயகனாக வெற்றிமாறனின் விடுதலை,  சசிகுமார் உடன் கருடன், மற்றும் கொட்டு காளி போன்ற படங்களில்  முதன்மை வேடமேற்று இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

இதே பாணியை கையில் எடுத்துக் கொண்ட புகழ் அவர்களும் சில படங்களில் காமெடியில் கலக்கிய தோடு “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்ற படத்தில் நாயகனாக களம் இறங்குகிறார்.

ஜே 4 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான இசையில், 

மாதவன் நடித்த என்னவளே படத்தின் இயக்குனர் சுரேஷ் அவர்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். புகழுக்கு ஜோடியாக காஞ்சனவாலா ஷரின் நடிக்கிறார்.

2024 மே 3, ரிலீஸ் ஆகும் புகழின் மிஸ்டர் ஜூ கீப்பர்

குழந்தைகள் கொண்டாடும் விதமாக மிருகங்களை முக்கிய பாத்திரமாக அமைத்து அதை சுற்றிய பின்னப்பட்ட கதை என்பதால்  அனிமேஷன் எதுவும் இல்லாமல் உண்மையாகவே மிருகங்களுடன் புகழை விளையாட விட்டிருக்கிறார்களாம்.

இதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று புகழ் ட்ரைனிங் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி ஊட்டி மற்றும் பிலிப்பைன்ஸில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

குழந்தைகள் கொண்டாடும் படமாக  இருக்கும் என்பதால் கோடை விடுமுறையை ஒட்டி மே 3 படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்று மகிழ்ச்சியான செய்தியை தனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் புகழ்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →