அங்கேயும் என் கொடி பறக்கணும்.. மெத்தனத்தில் பட்டறையை போட்டு அலப்பறை பண்ணும் அனிருத்

தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர்களில் முக்கியமானவர் அனிருத். ஹீரோக்கள் கால்ஷீட் கிடைத்து விடும் போல இவர் கால்சீட் கிடைக்கவே கிடைக்காது. அந்த அளவிற்கு பிசியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கு அனிருத்  இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.

இப்பொழுது ஏ ஆர் ரகுமான் போல் வளர வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அதனால் தமிழில் படங்களுக்கு மட்டும் மெட்டு போட்டால் நாம் வளர முடியாது.  அடுத்த ஆஸ்கார் நாயகனாக தானாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணி அனிருத் தற்போது அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.

நம் கொடியை எல்லா பக்கமும் பறக்க வைக்க வேண்டும் என்ற பேராசையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவிடும் அனிருத் தற்போது, மும்பையில் ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறார்.

பல சினிமாகாரர்கள் தங்கி இருக்கும் அந்த பிரம்மாண்ட ஹோட்டலில் வைத்துதான் பைனான்சியர்கள் கதை மற்றும் அனைத்தையும் டிஸ்கஷன் செய்கிறார்கள். எனவே அவர்களை கரெக்ட் செய்வதற்காக அங்கேயே பட்டனை போட்டு தங்கி விட்டாராம்.

எனவே தற்போது மும்பையில் மையம் கொண்டிருக்கும் அனிருத், அங்கே பல ஹிந்தி படங்களை கைப்பற்றி விட வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழிலும் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி அந்த படங்களுக்கெல்லாம் சரியான நேரத்தில் இசையமைத்துக் கொடுக்காமல் அனிருத் தன்னுடைய பேராசையில் பாலிவுட்டில் விரைவில் வளர வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.

இப்படி பொசுக்குன்னு மும்பையில் போய் உட்கார்ந்து இருக்கும் அனிருத்தின் அடுத்தடுத்த தமிழ் படங்களுக்கு கொடுத்த நேரத்தில் பாடல்களை இசையமைத்து கொடுத்து விடுவாரா என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் புலம்பிக் தவிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →