ஆர்யாவை சர்ச்சையில் சிக்க வைத்த முத்தையா.. காதர் பாட்ஷா போஸ்டரில் இருக்கும் மர்மம்

ஆர்யாவிற்கு அரண்மனை 3, எனிமி போன்ற படங்களை தொடர்ந்து சமீபத்தில் கேப்டன் திரைப்படமும் ரசிகர்களிடம் படு மொக்கையான விமர்சனங்களை பெற்று பிளாப் ஆனது. இதனால் இந்த வருடம் நிச்சயம் ஏதாவது ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் முத்தையா படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இப்போது அந்தப் படத்தினால் பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். பெரும்பாலும் கிராமத்து பாணியில் படங்களை உருவாக்கும் முத்தையா சமீபத்தில் விருமன் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கண்டார். அதன் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் ஆர்யாவின் பிறந்த நாளான நேற்று வெளியாகி, தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான பெயரில் வெளியான இந்த பெயருடன் போஸ்டரில் ஆர்யாவிற்கு பின்னால் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா புகைப்படமும் இருக்கிறது.

மேலும் சாதி ரீதியாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் முத்தையா, தற்போது ஆர்யாவை வைத்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் டைட்டில் ராமநாதபுரம் எம்எல்ஏ-வின் பெயர். ஆகையால் அவரைப் பற்றிய கதை தான் இந்த படத்தின் கதையா? என்று சோசியல் மீடியாவில் பரபரப்பு கிளப்பி உள்ளது.

ஏற்கனவே சாதி ரீதியாக படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் முத்தையா இந்த படத்தில் இரு சமூகத்தினரின் பெயர்களை ஒன்றாக சேர்த்து படத்தின் டைட்டிலை வைத்து பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை ரிலீஸ் செய்யும்போது பள்ளி சிறுவர்களுக்கு இலவசமாக சைக்கிள்களையும் படக்குழு வழங்கியிருக்கிறது.

ஆனால் முத்தையாவை நம்பி தற்போது ஆர்யா சிக்கலில் சிக்கிக்கொண்டார். இருப்பினும் தற்போது இணையத்தில் படத்தின் டைட்டிலை குறித்து விமர்சிப்பதை பார்த்ததும், இயக்குனர் முத்தையா நிச்சயம் இதற்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →