மிஷ்கினுக்கு பிடித்த மூன்று நடிகைகள்.. அப்புறம் என்ன ஒரே ஜாலிதான்

கடந்த 2006ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான மிஸ்கின், அதைத்தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குனராக மாறிவிட்டார்.

அதிலும் குறிப்பாக மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருடைய பேய் படத்தில் வரும் பேயை பார்த்தால், பயம் வருவதை விட, பேயை பிடிக்கும் அளவுக்கு மிஸ்கினின் தனித்துவமான கதை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்.

அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் அழகாக எடுத்திருப்பார். அதனாலேயே பல நடிகர், நடிகைகளும் மிஷ்கின் படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். மிஸ்கின் இயக்கத்தில் வெளியாக உள்ள பிசாசு 2 படத்தினைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது உங்களது படங்களில் பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் உங்களுக்கு பிடித்த நடிகைகள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிஸ்கின், ‘என்னுடன் பணியாற்றும் நடிகர்கள் மிகவும் என்னை கவர்ந்தவர் பாவனா. மிகவும் திறமையான நடிகை. சொன்ன உடனே நான் எதிர்பார்க்கும் அளவுக்கு நடித்து முடித்து விடுவார்.

அதேபோலத்தான் நடிகை பூர்ணாவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கற்பூரம் போல் நடித்து விடுவார். அதன்பிறகு நித்யா மேனன், இவருக்கு எந்த விதமான நடிப்பை சொன்னாலும் நடித்து விடுவார்’ என மிஸ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

பொதுவாக மற்ற எந்த நடிகர் அல்லது இயக்குனர்களிடமும் இந்த கேள்வி கேட்டிருந்தால், நிச்சயம் மழுப்பி சமாளித்து விடுவார்கள். ஆனால் மிஷ்கின் துணிச்சலாக தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருப்பது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. இருப்பினும் ஒருசிலர் மிஸ்கின் தனக்குப் பிடித்த நடிகைகளிடம் ஜாலி பண்ணி இருப்பாரு போல என்றும் கிண்டலடித்தனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →