நாசுக்காக தூண்டில் போட்ட நயன்தாரா.. இயக்குனருக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் இவருக்கு பாலிவுட்டில் மவுசு ஏறிக்கொண்டு தான் இருக்கிறது. அதனாலேயே தற்போது இவர் கைவசம் பல ஹிந்தி திரைப்படங்களை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் நயன்தாராவின் பேச்சை கேட்டு ஒரு படத்தில் நடிக்காமல் விலகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அரண்மனை திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கிய சுந்தர் சி நான்காவது பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதியை கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

இதற்கு சம்பள பிரச்சனை, கதை பிடிக்கவில்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பின்னணியில் நயன்தாரா தான் இருக்கிறார் என்ற விஷயம் அம்பலமாகியுள்ளது. ஏனென்றால் அவர் தற்போது அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டது தான்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அஜித்துக்காக தயார் செய்திருந்த அந்த கதையை விஜய் சேதுபதியை வைத்து எடுக்கலாம் என்று விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். ஒரு வகையில் இப்படி ஒரு ஐடியாவை கொடுத்ததும் லேடி சூப்பர் ஸ்டார் தான். ஏனென்றால் விக்னேஷ் சிவனின் முந்தைய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதனால் அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பும் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நயன்தாராவுடன் இணைந்தும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹிந்தி படத்திலும் இவர்கள் இருவரும் நடித்து வருகின்றனர். அதனால் தான் நயன்தாரா சுந்தர் சி படத்தில் நடிக்க வேண்டாம் என்றும் தன் கணவருக்கு கால்ஷூட் கொடுங்கள் என்றும் கேட்டு இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதியும் சம்மதித்து தற்போது சுந்தர் சி-க்கு பெரிய ஆப்பை வைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தான் தற்போது திரையுலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எல்லா விஷயத்தையும் பிசினஸ் மூளையோடு செய்யும் நயன்தாரா நாசுக்காக தூண்டில் போட்டு விஜய் சேதுபதியை தன் பக்கம் இழுத்துள்ளார். இந்த விஷயத்தால் பாவம் சுந்தர் சி தான் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் அந்த படத்தில் தானே ஹீரோவாக களமிறங்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →