வெட்கமா இல்ல, அசுரன் ஆவேசம்.. தனுஷை கேவலப்படுத்தும் காட்சியை ஆவணப்படத்தில் வைத்த நயன்தாரா

ஆரம்பத்தில் நயன்தாரா போட்ட பதிவை பார்த்து தனுஷ்க்கு எதிராக திரும்பிய பலர், தற்போது தனுஷுக்கு ஆதரவாக மாறியுள்ளனர். நாளைய தினம் netflix ott தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் செய்தியாளர்களுக்கு Press ஷோ-வில் திரையிடப்பட்டு கான்பித்துள்ளனர்.

இதை பார்த்த பிறகு தான் தனுஷின் கோவம் நியாயமானது என்று பலருக்கு தற்போது தோன்றியுள்ளது. ஏன் என்றால் தனுஷ் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனால் தான் தனுஷ், “நீ பத்து அடி பாய்ந்தால் , நான் பதினாறு அடி பாயுவேன் ” என்ற கணக்கில் தற்போது, 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

வெட்கம் மானம் இல்லயா?

ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், தனுஷ் நிலைமையில் இருப்பவர்களுக்கு கோவம் வருவது நியாயம் தான். ஏன் என்றால் 6 கோடி பட்ஜெட் படத்தை, இவர்கள் காதலித்து 10 கோடியாக ஆக்கியுள்ளனர். சொல்லப்போனால், 16 கோடி செலவிழுத்து விட்டு, அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் என்றும் கூட கூறப்படுகின்றது.

ஆனால் இதெல்லாம் பிரச்சனை இல்லை. இவர்களது காதல் மலர்ந்தது நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்திலிருந்து தான். அப்படி இருக்க, அந்த படத்தில் வேலை செய்த பலர், இந்த காதல் ஜோடியின் காதலை பற்றி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் ராதிகா பேசியது தான் பேசும்பொருளாக மாறியுள்ளது.

நடிகை ராதிகா, இந்த படத்தில், அவர்கள் காதல் பற்றி பேசும்போது, நடிகர் தனுஷ் சொன்னதாக சில விஷயங்களை பேசியுள்ளார். “இவர்கள் இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். வெட்கம் மானம் இல்லையா என்று கேட்டார்..” என்ற Exclusive தகவலை தலைவி ராதிகா பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா நினைத்திருந்தால், அதை எடிட்டிங்கில் தூக்கி இருக்கலாம். ஆனால் தனுஷ் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பேசிய அந்த காட்சியை அப்படியே வைத்துள்ளார். அதனால் தான் தனுஷ், “ஓ நீ அப்படி வரியா…நான் வைக்கிறேன் பாரு செக்” என்று சொல்லி தற்போது கேஸ் போட்டுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment