விக்னேஷ் சிவன் உடன் விவாகரத்தா.? சர்ச்சையை கிளப்பும் நயனின் இன்ஸ்டா ஸ்டோரி

Nayanthara – Vignesh Shivan : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மார்க்கெட் திருமணத்திற்கு பிறகு டல்லடித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அதோடு ஒருபுறம் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்த நயன்தாரா இன்ஸ்டா கணக்கை தொடங்கியிருந்தார். அதில் அவருடைய படத்திற்கான அறிவிப்பு மற்றும் தனது கணவர் மற்றும் மகன்களின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை நடந்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் எப்போதும் போல இருந்து வருகிறார்கள்.

ஆனால் இப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்து விட்டார்களோ என்ற எண்ணத்தை உண்டாக்கும்படி நயனின் இன்ஸ்டா ஸ்டோரி அமைந்துள்ளது. ஹும் ஐ லாஸ்ட் என்று இன்ஸ்டா ஸ்டோரியை நயன்தாரா வைத்துள்ளார். நயன்தாரா எதை இழந்து விட்டார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் சமீபகாலமாக நடிகைகள் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்து வருகிறார்கள். அதேபோல் தான் நயன்தாராவும் தன்னுடைய படம் அல்லது ஏதாவது விளம்பரத்திற்காக நான் இழந்து விட்டேன் என்று இன்ஸ்டா ஸ்டோரி வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இதில் எந்த சர்ச்சையும் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.

சர்ச்சையை கிளப்பும் நயனின் இன்ஸ்டா ஸ்டோரி

nayanthara-insta-story
nayanthara-insta-story

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →