ராமுடன் கைக்கோர்த்த பிரேமம் பட புகழ்.. வித்தியாசமான கெட்டப்பில் வெளிவந்த சூட்டிங் புகைப்படங்கள்

கோலிவுட்டில் கற்றது தமிழ், தரமணி, தங்கமீன்கள், பேரன்பு போன்ற சில தரமான படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ராம். இவரது படங்கள் அனைத்துமே நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு நடந்ததை போன்ற உணர்வுகளை அளிக்கும்.

அந்த அளவிற்கு எதார்த்தமான கதைகளை சிறந்த படைப்புகளாக வழங்கியவர் தான் ராம். அதனால் தான் இவர் இயக்கிய தங்கமீன்கள் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ராம் சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இறுதியாக பேரன்பு படத்திற்கு பின்பு தற்போது ராம் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

nivin pauly soori
nivin pauly soori

இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் நீண்ட தாடி மற்றும் முடியுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் நிவின்பாலி காட்சி அளிக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூரி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்நிலையில் தான் சூரியும் நிவின்பாலியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

nivin-pauly
nivin-pauly
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →