லைகர் மரண அடி, விஜய் தேவர கொண்டா எடுத்த தில்லான முடிவு.. திகைத்துப்போன திரையுலகம்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் லைகர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கலெக்ஷனை பெறவில்லை. கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 60 கோடியை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்திற்கு எதிராக பல கடும் விமர்சனங்களும் வெளிவந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் இவ்வளவு மோசமான விமர்சனங்களை சந்தித்தது பட குழுவினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு கூட திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு படு தோல்வியை சந்தித்த இந்த திரைப்படத்தால் விஜய் தேவரகொண்டா தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது இந்த திரைப்படத்தால் பெரும் நஷ்டத்தில் சிக்கித் தவித்து வரும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக அவர் தன் சம்பளத்திலிருந்து ஆறு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டாராம். தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலர் இணைந்து தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

அந்த வகையில் இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டாவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதியை தான் அவர் தற்போது திருப்பி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கும் சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

பொதுவாக ஒரு நடிகர் நடிக்கும் திரைப்படம் நஷ்டம் அடைந்து விட்டால் அதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுப்பது வழக்கம். அதேபோன்றுதான் விஜய் தேவரகொண்டாவும் நடிக்க இருக்கிறார். ஆனால் இவர் தன் சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல், முழுவதுமாக விட்டுக் கொடுத்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →