தமிழ் ராக்கர்ஸை ஆட்டம் காண வைத்த தனுஷ்.. சிக்காமல் சிட்டாய் பறக்கும் நானே வருவேன்

உலக சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம். இவர்கள் கோடிகளைக் கொட்டி படமாக்கிய தயாரிப்பாளர்கள் பலரையும் நிற்கதி ஆகியிருக்கின்றன. ஆனால் இப்போது அந்த தமிழ் ராக்கர்ஸை ஆட்டம் காண வைத்திருக்கிறது நானே வருவேன் திரைப்படம்.

இந்த படம் தனுஷ்,செல்வராகவன் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்த ப்ராஜெக்ட். கலைப்புலி தாணு தயாரிப்பில் அதிக விளம்பரம் இன்றி பொன்னியின் செல்வன் படத்துடன் இணைந்து 3 நாளைக்கு முன்பு ரிலீஸ் ஆகியுள்ளது. அதிக பட்ஜெட் இல்லாமல் கதை திரைக்கதை மற்றும் தனுஷின் நடிப்பை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் ஹாரர் ப்ளஸ் திரில்லர் ஜானரில் திரையரங்கில் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கும் இந்தப் படம் தமிழ் ராக்கர்ஸ்சுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அனைத்து படங்களையும் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியீட்டு தயாரிப்பாளர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.

சமீபகாலமாக தியேட்டர்களில் படம் வெளியாகமல் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாவது இன்னும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. படம் வெளியான பத்து நிமிடங்களிலேயே ஹெச்டி பிரிண்ட் வசதியுடன் புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் பக்கா பிளான் போட்டு நானே வருவேன் படத்திற்காக ‘பவர் ஆஃப் பைரசி டீம்’ என்ற அட்மின் டீம்மை உருவாக்கி, படத்தை திரையரங்குகள் தவிர வேறு எங்கும் கசிய விடாமல் பார்த்துக்கொண்டனர்.

இதனால் இப்போது வரை தமிழ் ராக்கர்ஸ்க்கு நானே வருவேன் படத்தின் ப்ரிண்ட் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதன் பிறகு வெளியாகும் மற்ற படங்களும் நானே வருவேன் படக்குழுவை போலவே செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் அனைவருக்கும் தோன்றுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →