பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு எப்போ தெரியுமா.? மணிரத்னம் கொடுக்கும் ட்ரீட்

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கும் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் மட்டும் இந்த படம் 130 கோடி அளவுக்கு வசூலித்தது. அதிலும் தமிழகத்தில் 230 கோடிக்கு அதிகமாக வசூலித்து, வசூல் சாதனையில் முதலிடத்திற்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான மீதி உள்ள பணிகள் விரைவில் முடிக்க பட குழு தீவிரம் காட்டி வருவதுடன் படத்தை வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தெரிவித்திருந்தது. முதல் பாகத்தை அருள்மொழிவர்மன் இறந்து போனதாக கிளைமாக்ஸில் கட்டி இருப்பார்கள்.

ஆனால் அது குறித்த முழு கதையும் விவரிக்கப்படவில்லை. இரண்டாம் பாகத்தில் பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனை வைத்து தான் முழு கதையும் நகரும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினத்திற்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் ரொமான்டிக் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த படத்தில் அருள்மொழி வர்மன்-வானதி இருவருக்கும் ஆன பாடலை காதலர்களுக்காக பரிசளிக்கும் விதத்தில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவருடைய மெல்லிய குரலில் வெளியான லவ் சாங் அனைத்து காதலர்கள் பொக்கிஷமாக இருக்கும் நிலையில், எந்த பாடங்களும் அந்த லிஸ்டில் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் மாதத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் படத்தின் ட்ரெய்லரும் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் பொன்னின் செல்வன் படத்தின் முதல் பாரதத்திலேயே முழுக்க லாபத்தை பெற்ற படக்குழு, படத்தின் இரண்டாம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த காத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →