மிரளவிட்ட பொன்னின் செல்வன் ட்ரெய்லர்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படமாக எடுத்துள்ளார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமான் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பான் இந்திய படமாக சர்வதேச அளவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக இன்று பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

சோழர்களின் பெருமையை படைச்சாற்றுவிதமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலரை ஐந்து மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர். தமிழில் உலகநாயகன் கமலஹாசனும், மலையாளத்தில் பிரிதிவிராஜ், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் ஜெய்ந்த் கைகினி மற்றும் ஹிந்தியில் அனில் கபூர் ஆகியோர் ஒரே நேரத்தில் வெளியிட்டு உள்ளனர்.

முன்பு எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினம் மெனக்கெட்டு செய்து வருகிறார். அவரின் இந்த முயற்சி கண்டிப்பாக ஒரு மாபெரும் வெற்றியை கொடுக்கும். தற்போது இந்த பொன்னியின் செல்வன் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →