பூஜா ஹெக்டே கூறிய ‘ஜன நாயகன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் இணையும் மெகா பொலிட்டிக்கல் த்ரில்லர் ‘ஜன நாயகன்’ திரைப்படம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய சர்பிரைஸாக அமைந்துள்ளது.

படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒவ்வொருவரும் தனித்துவமான கேரக்டர்களுடன் படத்தை வலுப்படுத்த உள்ளனர். இதில் பாபி தியோல் வில்லனாக வருவார் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளராக அனிருத் புயலை கிளப்ப உள்ளார். அவருடைய BGM மற்றும் சாங்ஸ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் விஜய்யுடன் இணைந்திருக்கும் பாடல்கள் சூப்பர்ஹிட்.

இந்த படம் நடிகர் விஜய்க்கு கடைசி திரைப்படமாக இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இது அவரது முழுநேர அரசியல் பயணத்துக்கு ஒரு முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், படம் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. பூஜா ஹெக்டே, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் படப்பிடிப்பு பணி முடிந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இது படத்தின் வேலைகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளிக்கிறது.

மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்காக, விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22-ம் தேதி, படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோவை வெளியிட தயாரிப்புக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வீடியோ ஒரு பவர் பேக் “சர்ப்ரைஸாக”இருக்கும் என கூறப்படுகிறது!

அறிமுகத்தை விட, நிறைவு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்ப ‘ஜன நாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒரு மகத்தான அனுபவமாக அமையலாம்!

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →