டிஎன்ஏ படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ்.. அதர்வாவுக்கு கம்பேக் கொடுக்குமா.?

Atharvaa : நேற்றைய தினம் அதர்வாவின் நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது மருத்துவத்தில் நடக்கும் குற்றங்களை பின்தொடர்ந்த படம் தான் டிஎன்ஏ.

பிறந்த குழந்தை கடத்தப்படுவது மற்றும் மாற்றப்படுவதை வெளி கொண்டு வந்திருக்கிறது. பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் அதர்வாவில் சிறந்த நடிப்பு. மேலும் கதாநாயகி நிமிஷாவும் காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

திரில்லர் கலந்த இந்த படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை பக்க பலமாக அமைந்தது. படத்தின் மைனஸ் என்னவென்றால் முதல் 30 நிமிடங்கள் எங்கேயோ கதை நகர்கிறது. அதன் பிறகு தான் முக்கியமான இடத்திற்கு நுழைகிறது.

டிஎன்ஏ படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள்

மேலும் ஒரு சாதாரண மனிதனாக இருக்கும் அதர்வா செய்யும் காட்சிகள் நம்ப முடியாமல் உள்ளது. படத்தின் மேக்கிங் மற்றும் டெக்னிக்கல் அம்சங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் எண்ணம். விசாரணை காட்சிகளில் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் விறுவிறுப்பாக இருக்கும்.

அதேபோல் படத்திற்கு ஜிப்ரானின் பிஜிஎம் நன்றாக இருந்தாலும் பாடல்கள் கை கொடுக்கவில்லை. படத்தில் ஐட்டம் பாடல் மற்றும் பார் பாடல் ஆகியவை தேவை இல்லாமல் திணிக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் வேகத்தையும் குறைத்து என்று தான் சொல்ல வேண்டும்.

டிஎன்ஏ படம் ஓடிடியில் பார்க்க ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது. ‌ ஆனால் தியேட்டர் அனுபவத்தை சிறப்பிக்க தவறியது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதர்வா நல்ல நடிப்பை கொடுத்தும் டிஎன்ஏ சற்று தடுமாறி தான் இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →