அப்பா முன் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.. புத்திசாலித்தனமாக பழிவாங்கிய பிரபுதேவா

தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரிடம் நான்கு மடங்கு சம்பளம் கேட்டதாக நடிகர் பிரபுதேவா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் பிரபுதேவா தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு பேட்டியில் மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஜி வெங்கடேஸ்வரன் தன்னை அவமானப்படுத்திய நிகழ்வு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, மௌனராகம் திரைப்படம் படமாக்கப்பட்டபோது அப்படத்தில் இடம்பெற்ற பிரபுதேவா பனி விழும் இரவு பாடலை இயக்கி இருந்தாராம்.

அப்போது அப்பாடலை முடித்துவிட்டு தனது சம்பள பாக்கியான மீதி பணத்தை வாங்குவதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனை பிரபுதேவா சந்தித்துள்ளார். அச்சமயத்தில் பிரபுதேவாவின் தந்தையின் நண்பரும் உடனிருந்ததால் பிரபுதேவா சம்பளத்தை கேட்காமல் சற்று ஒதுங்கி இருந்தார். இதனை அறிந்த தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன், என்ன வேண்டும் என்று கேட்க பிரபுதேவா தனது சம்பள பாக்கியை கேட்டுள்ளார்.

உடனே பிரபுதேவா இயக்கிய பனி விழும் இரவு பாடலின் நடன காட்சிகளை கண்டு இதெல்லாம் ஒரு நடனமா என திட்டி, தன் அப்பா மற்றும்அவரது  நண்பர் முன்னாலேயே ஜி வெங்கடேசன், பிரபுதேவாவை அவமானப்படுத்தியுள்ளாராம். பின்னர் பிரபுதேவா எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாராம். அப்போது மௌனராகம் திரைப்படம் ரிலீஸான பின் படமும் பிரம்மாண்டமான ஹிட்டான நிலையில்,முக்கியமாக பணிவிழும் இரவு பாடலின் நடனக் காட்சியை காண்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த வெற்றியை கண்ட தயாரிப்பாளர் வெங்கடேசன், பிரபுதேவாவை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தனது அடுத்தப்படமான அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்காக நடன இயக்குனராக பிரபுதேவா கமிட்டாக வேண்டுமென கேட்க அதற்கு பிரபுதேவா நான் நினைத்தால் நீங்கள் என்னை அவமானப்படுத்தியதற்கு உங்கள் படத்தில் கமிட்டாக மாட்டேன் என சொல்லலாம்.

ஆனால் அப்படி நான் சொன்னால்,என் தொழிலுக்கு மரியாதையல்ல. எனவே நான் மற்ற தயாரிப்பாளர்களிடம் வாங்கும் சம்பளத்தை விட உங்கள் படத்திற்கு நான்கு மடங்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என பிரபுதேவா கேட்டுள்ளாராம். அதற்கு தயாரிப்பாளர் ஜி.வெங்கடேசனும் சரி என்று ஒப்புக்கொண்டு அக்னி நட்சத்திரம் படத்திற்கு கம்மிட் செய்தாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →