Aadujeevitham Movie Review – ரத்தமும், சதையுமாய் உருவாகியுள்ள ஆடுஜீவிதம்.. முழு விமர்சனம் இதோ!

Aadujeevitham : பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

பிருத்விராஜின் அசத்தலான நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பார்த்து திரையரங்குகளில் கண்ணீர் விடாத ரசிகர்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாய் உருவாகி இருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

குடும்பத்திற்காக வெளிநாடு செல்லும் ஒரு இளைஞன் தவறுதலான ஒரு வேலையில் சிக்கிக் கொண்டு படும் பாடு தான் ஆடுஜீவிதம் படத்தின் ஒன்லயன் ஸ்டோரி. நஜீப் முகமது ஆக பிருத்விராஜ் அவரது காதலியாக அமலா பால் நடித்துள்ளனர்.

பிருத்விராஜுக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்

நஜீத் முகமது தன்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு நண்பரின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். கடைசியில் அங்கு சென்று போது தான் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

அங்கு கொத்தடிமையாக நஜீத் அணு அணுவாய் சித்திரவதை அனுபவிக்கிறார். அந்த கும்பல் இடமிருந்து அவர் மீண்டும் வந்தாரா என்பதுதான் ஆடுஜீவிதம். படத்திற்கு பிளஸ் என்றால் இயக்கம், கதாபாத்திரங்களின் நடிப்பு திறமை தான். குறிப்பாக பிருத்விராஜுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.

அந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொண்டு உழைப்பை போட்டு இருக்கிறார். ஏஆர் ரகுமானின் இசை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. மேலும் ஆடுஜீவிதம் படத்தில் சில காட்சிகள் மிகுந்த பாரத்தை ஏற்படுத்துகிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் அற்புதமாக இருக்கிறது. மன திடகாத்திரமாக இருந்தால் தான் இந்த படத்தை பார்க்க முடியும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.75/5

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment