தொடை அழகி ரம்பாவை மிஞ்சிய ப்ரியா அட்லியின் வைரல் புகைப்படம்.. நயன்தாராவை மிஞ்சிடுவாங்க போலயே!

Priya Atlee Recent Pics: அட்லிக்கு ஜவான் படம் ஹிட்ட அடித்ததில் இருந்தே பாலிவுட்டில் பெரிய டிமாண்ட் ஆகிவிட்டது. அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு போய் சிறப்பிக்கும் அளவுக்கு டாப் இயக்குனராக அட்லி மாறிவிட்டார். காதல் கணவர் பாலிவுட் உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக மாறியதால என்னவோ, பிரியா அட்லி தன்னை பாலிவுட்டின் ஹீரோயினாகவே நினைத்துக் கொண்டது போல் தெரிகிறது. அவருடைய சமீபத்திய புகைப்படமும் அப்படித்தான் இருக்கிறது.

அட்லி பிரியா தம்பதிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த வருடம் இந்த தம்பதிக்கு மீர் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு பக்கம் குழந்தை பிறந்த சந்தோஷம், மறுபக்கம் ஜவான் படம் வெற்றி என அட்லிக்கு எல்லாமே வெற்றிக்குறியாக அமைந்துவிட்டது. இந்த குதூகல சந்தோஷத்தை அம்பானி வீடு கல்யாணத்தில் தொடங்கி, நேற்று வரை படுஜோராக கொண்டாடி வருகிறார்.

வழக்கமாக அட்லி ஏதாவது செய்தால்தான் அது பெரிய அளவில் டிரெண்டாகும். ஆனால் இப்போது டிரண்டாகி இருப்பது அவருடைய மனைவி ப்ரியா அட்லி. அட்லி மனைவி பிரியா நேற்று எடுத்துக்கொண்ட படு கிளாமரான புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஒரு பக்கம் குழந்தை பெற்றாலும் பிரியா அப்படியே இருக்கிறார் என புகழ்ந்து தள்ள, மறு பக்கம் அட எல்லாம் பாலிவுட் காசு என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அட்லி கருப்பு கலர் கோட் சூட்டில் பாலிவுட் தான் போல போஸ் கொடுக்க அவருடைய மனைவி பிரியா பாலிவுட் கதாநாயகிகளையே தோற்கடிக்கும் அளவுக்கு உடை அணிந்து பக்கத்தில் நிற்கிறார். லாவண்டர் கலர் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்திருக்கும் பிரியா அதே கலரில் மிடி அணிந்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் நிலையில் தொடைவரை தெரியும் கிராஸ் கட் மிடி என்பதால் படு கிளாமராக இருக்கிறது.

காதல் கணவர் அட்லி பாலிவுட் போனதும், தன்னை பெரிய ஹீரோயின் ஆகவே நினைத்துக் கொண்டார் போல பிரியா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்போது உள்ளவர்களுக்குத்தான் பிரியா அட்லியின் மனைவி என அறிமுகம் செய்ய வேண்டும். அவர் அட்லியை திருமணம் செய்வதற்கு முன்பே சின்ன திரையில் பிரபலமான முகமாக இருந்தவர்.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பிரியா, பாய்ஸ் வெஸ்ட் கேர்ள்ஸ் செல்லும் நடன நிகழ்ச்சியிலும் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியில் அவர் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனையே அலற விட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாகவும் பிரியா நடித்திருக்கிறார். அட்லியுடன் திருமணமான பிறகு தான் கிருஷ்ண பிரியா எனும் பிரியா அட்லி சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →