ஒன்றரை வருஷமா சைட் அடித்த ப்ரியா பவானி சங்கர்.. கொஞ்சம் கூட மதிக்காத நபர்

தற்போது வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்திருக்கிறார். அதிலும் அவர் கமலுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பல திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கடந்த சில வருடங்களாகவே ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தார். அப்போது ஜிம்முக்கு செல்லும்போது இவர் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒருவரை சைட் அடித்திருக்கிறார்.

இது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. இவர் வழக்கமாக செல்லும் ஜிம்முக்கு ஒரு பையனும் அடிக்கடி வருவாராம். அமைதியான குணமும் தன்னுடைய வேலையை மட்டுமே பார்க்கும் அவருடைய நடவடிக்கையும் பிரியாவை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இதனால் ரொம்ப நாட்கள் அவர் அந்த பையனை சைட் அடித்த படியே இருந்திருக்கிறார்.

ஆனால் இப்படி ஒருவர் தன்னை வருட கணக்கில் பார்ப்பது கூட அந்த பையனுக்கு தெரியாதாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவர் பிரியாவிடம் ஒரு நாள் கூட பேசியது கிடையாதாம். அதன் பிறகு பிரியா பவானி சங்கர் வேறு ஜிம்முக்கு மாறி மாறியதால் அந்தப் பையனை பார்க்கவில்லை.

தற்போது இதைப் பற்றி கூறிய அவர் ஒரு நடிகை என்ற காரணத்திற்காக பேசாமல் இயல்பாக தன் வேலையை பார்த்த அந்தப் பையனை எனக்கு பிடித்திருந்தது. அதேபோன்று அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் நபர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அம்மா அப்பா காசில் பி எம் டபுள்யு கார் வைத்திருக்கும் பையன்களை விட, சொந்த உழைப்பில் முன்னேறி பைக் வைத்திருக்கும் பையன்களை தான் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியிருக்கும் எந்த விஷயத்தை கேட்ட ரசிகர்கள் நீங்கள் சைட் அடித்த அந்தப் பையன் யார் என்று கேட்டு வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →