5000 கோடியை அசால்டாக இறக்கும் தயாரிப்பு நிறுவனம்.. அஜித் முதல் சங்கர் வரை விடும் தூது

Production company produces films invested 5000 crore in cini industry: இன்றைய நடைமுறையில் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் மொழியை ஒரு தடையாக கொள்ளாமல் பான் இந்தியா மூவியாக, இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு  வெற்றி பெற்று வருகிறது.

ஒரு சில கதைகள் ஒரு சில இடங்களில் தோற்றுப் போனாலும்,  அதே கதை, மற்ற இடங்களில், மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்படுவது படைப்பாளியின் திறமைக்கும், கலைக்கும் ஆரோக்கியமான ஒன்றுதான்.

இதனை கருத்தில் கொண்டு இப்போது தயாரிக்கும் படங்கள் பல மொழிகளிலும் முன்னணி நட்சத்திரங்களை,

அந்தந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் கதைக்குள் நுழைத்து வெற்றி அடையும் தந்திரத்தை அறிந்து வைத்துள்ளனர் தயாரிப்பு நிறுவனங்கள்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வரிசையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து முன்னிலையில் இருக்கின்றது.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் 

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது. எப்போதுமே அஜித் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் நல்ல பாண்டிங்கில் தான் இருப்பார்.

தற்போது விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவின் பொறுப்பற்ற தன்மையால், அதனுடன் வருங்காலங்களில் தொடர முடியாமல்,

தெலுங்கு நிறுவனத்தின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

இவரை போலவே இயக்குனர் சங்கர் அவர்களும், தான் இயக்கும் அடுத்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு தூது விட்டு வருவதாக தகவல். 

இந்த பிரம்மாண்ட இயக்குனருக்கு ஏற்ற நிறுவனம் இந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான்.

ஏனென்றால் வரிசையாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2,ராம் சரணின் அடுத்த படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணி போட்டுள்ள NTR 31 படம் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர்கள்தான் தயாரிக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி ஹிந்தியிலும் மைத்ரி மூவி மேக்கர்ஸின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் திரைத்துறையில் மட்டும் முதலீடு செய்துள்ளது மைத்திரி மூவி மேக்கர்ஸ்.

நவீன், யலமஞ்சிலி ரவிசங்கர் மற்றும் மோகன் செருகுரி போன்ற நபர்களால் நிர்வகிக்கப்படும் மைத்திரி மூவி மேக்கர்ஸ்,

இதுவரை விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி, அல்லு அர்ஜுனின் புஷ்பா முதல் பாகம் போன்ற பல படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment