புஷ்பா 2 நடிகர்கள் வாங்கிய சம்பளம்.. ராஸ்மிகாக்கு இவ்வளவுதானா?

டிசம்பர் ஐந்தாம் தேதி ரிலீசான புஷ்பா 2 படம் வெறும் 8 நாட்களில் 1110 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. இவ்வளவு குறைவான நாட்களில் ஒரு படம் இத்தனை கோடிகள் வசூலித்தது உலக சாதனை. பாலிவுட் படங்களையும் ஓவர் டேக் செய்து வரலாறு படைத்துள்ளது புஷ்பா 2.

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பதை இதில் பார்க்கலாம். படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் இதற்கு 300 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளார்.

சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப்பச்சன் என எல்லோரையும் மிஞ்சி விட்டார் அல்லு அர்ஜுன். அவருக்கு அடுத்தபடியாக இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கியது ராஷ்மிகா மந்தனா, இவருக்கு வெறும் 10 கோடிகள் மட்டுமே கொடுத்துள்ளனர்.

இந்த படத்தில் எஸ் பி பன்வர் சிங் ஆக நடித்த பகத் பாசிலுக்கு 8 கோடிகள் சம்பளம் கொடுத்துள்ளனர். இவர்களை தவிர இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் மங்களம் சீனு சுனில் மற்றும் ஜெகபதி பாபுவுக்கு இரண்டு கோடிகளும் கொடுத்துள்ளனர்,

கௌரவத் தோற்றங்களாக வந்து போகும் பிரகாஷ் ராஜ் மற்றும் ராவோ ரமேஷ் என இருவருக்கும் ஒரு கோடி கொடுத்துள்ளனர். இந்த படத்திற்கு மொத்தம் பட்ஜெட்டாக 400 கோடிகள் நிர்ணயிக்கப்பட்டது ஆனால் அதையும் தாண்டி 550 கோடிகள் வரை ஆகியுள்ளது. ஆனால் போட்டதை விட டபுள் மடங்கு லாபம் பார்த்துள்ளது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment