இட்லி கடை, பராசக்தி தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு.. சுத்து போட்ட அதிகாரிகள்

Parasakthi: வந்த வேகத்தில் அடுத்தடுத்த படங்களை தயாரித்து யார் இவர் என கேட்க வைத்தவர் தான் ஆகாஷ் பாஸ்கரன். இட்லி கடை, பராசக்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் தான் இவர்.

சிம்புவின் STR 49 படத்தையும் தயாரித்து வருகிறார். அது மட்டும் இன்றி அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தின் இயக்குனரும் இவர்தான்.

இப்படி ஒரே நேரத்தில் மூன்று பெரிய ஹீரோக்களின் படங்களை இவர் தயாரித்து வருகிறார். அதுவும் பராசக்தி விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு மோத இருக்கிறது.

இதனாலேயே ஆகாஷ் பாஸ்கரன் அதிக கவனம் பெற்றார். இந்நிலையில் இவருடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுத்து போட்ட அதிகாரிகள்

முன்னதாக டாஸ்மாக் ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக அமலாக்க துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். அதில் இன்று அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கான்ட்ராக்ட் எடுத்தவர்கள் உள்ளிட்டோர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அப்படித்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த மற்ற விவரங்கள் வெளியாகாத நிலையில் திடுக்கிடும் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →