GOAT படத்தின் விஜயகாந்த் காட்சியை பார்த்து மிரண்ட ரஜினி.. படக்குழுவினரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

GOAT: தளபதி விஜய்யின் GOAT படம் இறுதி கட்ட பணிகளில் இருக்கிறது. ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகி இருந்த நிலையில், நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

வசீகரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் சினேகா கெமிஸ்ட்ரியை பார்ப்பதற்கு கொள்ளை அழகு என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த இரண்டாவது பாடல் மூலம் வசீகரா படம் தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது.

அது மட்டுமில்லாமல் விஜய் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மெலடி பாடலை தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். GOAT படம் பெரும்பாலும் AI டெக்னாலஜியுடன் தான் உருவாகி வருகிறது. விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒரு கேரக்டர் AI டெக்னாலஜி உதவியுடன் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் நேற்று வெளியான பாடல், மறைந்த பின்னணி பாடகி பவதாரினியின் குரலை மீண்டும் AI டெக்னாலஜி உதவியுடன் கொண்டு வந்து உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேரக்டரை AI உதவியுடன் கொண்டு வந்திருப்பதாக ஏற்கனவே பட குழு சொல்லி இருந்தது.

ரஜினி படக்குழுவினரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

AI டெக்னாலஜி மூலம் மீண்டும் விஜயகாந்தை பார்த்தபோது ரஜினி மிரண்டு போய்விட்டதாக பட குழு சொல்லி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு சீனுக்காக பலமுறை பட குழுவை பாராட்டி தள்ளிவிட்டாராம் ரஜினிகாந்த். GOAT படத்தில் விஜயகாந்த் வரும் சீன் ரெண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போது படவேலைகள் முடிவடைந்த நிலையில், விஜயகாந்த் வரும் காட்சியை மட்டும் பட குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திரையிட்டு காட்டி இருக்கிறது. விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →