வம்சிக்கு ரூட்டு போட்டு கொடுத்த ரஜினி.. வாரிசு படத்திற்கு முன் உதாரணமே சூப்பர் ஸ்டாரின் இந்தப் படம் தான்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்து விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படம் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் வாரிசு உடன் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அல்டிமேட் குடும்ப சென்டிமென்ட் படங்களை தெலுங்கில் சிறப்பாக எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த வம்சி, தமிழ் ரசிகர்களுக்கு ஃபேமிலி சென்டிமென்ட் படமாக வாரிசை கொடுத்திருக்கிறார். இப்படி கமர்ஷியல் படங்களை சிறப்பாக இயக்கும் வம்சிக்கு சூப்பர் ஸ்டாரின் படம் தான் முன் உதாரணமாக இருந்திருக்கிறது.

1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான படையப்பா பக்கா ஃபேமிலி திரைப்படமாக முதல் முதலாக வம்சிக்கு ரூட்டு போட்டு கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தில் ரஜினி தன்னுடைய குடும்பத்திற்கு அபரிவிதமான அன்பை கொடுப்பவர் ஆக இருப்பார்.

அதிலும் தன்னுடைய மகள்களை பாதுகாக்க கூடிய அப்பாவாக நடித்து புகழின் உச்சத்தையே தொட்டவர் ரஜினி. மேலும் இந்தப் படத்தில், தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற மிதப்பை குடும்பத்தில் காட்டியதில்லை. அன்பு எதையும் சாதிக்கும் என்பதையும் சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தி இருப்பார்.

அதுமட்டுமின்றி  படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மகள்களை பகடைக்காயாய் வில்லன்கள் பயன்படுத்தினாலும் அதை சூப்பர் ஸ்டார் எப்படி பாசத்துடன் பெற்ற பிள்ளைகளை கையாளுகிறார்  என்பதையும் காட்டியிருப்பார்.

மேலும் குடும்பத்திற்காக எந்த ஒரு மனிதன் தன்னையே தாழ்த்திக் கொள்கிறானோ அவன் உயர்த்தப்படுவான் என்பதையும் படையப்பாவில் விளக்கி இருப்பார்கள். ஆகையால் படையப்பா தான் தன்னுடைய படங்களுக்கெல்லாம் முன் உதாரணம் என்று தெலுங்கு இயக்குனர் வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →