நான் தமிழன் இல்லன்னு மீண்டும் நிரூபித்த ரஜினி.. பணத்துக்காக ரெட்டை வேஷம் போடும் சூப்பர் ஸ்டார்

Actor Rajinikanth: என்னதான் கன்னடம் தாய் மொழியாக இருந்தாலும் என்னை வாழ வைத்துக் கொண்டிருப்பது தமிழ் தான். அதனால் நான் தமிழன் என ரஜினி வெளிப்படையாகவே கூறியதுண்டு. ஆனால் அது அனைத்தும் பணத்துக்காக அவர் போடும் ரெட்டை வேஷம் என தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

இதை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கடுமையாக கண்டித்துள்ளார். சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருடைய இறப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த திரையுலகினரும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல் ரஜினியும் தன் வருத்தத்தை தெரிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அதே நாளில் அவர் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதுதான் இப்போது கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. ரஜினியின் திரை வாழ்வில் இளையராஜாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

இவர்களின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. அதனாலயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் ரஜினி இளையராஜாவை சாமி என்று தான் சொல்வார். அப்படிப்பட்ட நண்பர் மகளை இழந்து துக்கத்தில் இருக்கிறார்.

பொதுவாக இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே முக்கிய காரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தூக்கம் அனுசரிப்பார்கள். ஆனால் ரஜினி இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைக்காமல் நடத்தியதோடு, மேடையில் சிரித்த முகத்தோடு பேசியும் இருக்கிறார். இது உண்மையில் கேவலமான விஷயம்.

இதை அவர் செய்திருக்கக் கூடாது இதுதான் அவருடைய தமிழ் பற்றா? என பயில்வான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதிலிருந்தே அவர் தமிழன் இல்லை என தெளிவாக தெரிகிறது. பணத்திற்காக தான் அவர் இப்படி எல்லாம் மேடையில் பேசி ஏமாற்றுகிறார் என பயில்வான் தன்னுடைய கண்டனத்தை ஆணித்தரமாக வைத்துள்ளார். இதற்கு ரசிகர்களும் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →