ரஜினி மாஸ் படத்திற்கு ரீமேக் செய்ய வாய்ப்பே இல்ல.. கிடுக்கு புடி போட்ட தயாரிப்பாளர்

சமீப காலமாகவே சினிமாவில் அதிக அளவில் ட்ரெண்டாகி இருப்பது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று மிகப் பெரிய ஹிட் படத்தை எடுத்து மறுபடியும் ரீமேக் செய்வது மற்றொன்று ஹிட் படங்களின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று எடுப்பது.  இதுதான் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் ரஜினி மாஸாக நடித்து சூப்பர் ஹிட் ஆன பாட்ஷா படத்தை ரீமேக் செய்வதற்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் அந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

ரஜினிக்கு பெரிய மாஸ் படமாக பாட்ஷா படத்தை கொடுத்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இப்பொழுது இந்தப் படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல இயக்குனர்கள் திட்டம் போட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செக் வைத்து விட்டார் இந்த படத்தின் தயாரிப்பாளர். பாட்ஷா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம் வீரப்பன்.

இவர்தான் அந்தப் படத்தின் அனைத்து உரிமைகளும் வைத்திருப்பவர். மற்றும் இவர் இந்த உரிமையை எவருக்கும் விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை. அடுத்து இவர் அந்த படத்திற்கு ஓகே சொல்லாமல் மற்ற யாரும் ரீமேக் செய்ய முடியாது. இதனால் இந்த படத்தை எப்படியாவது ரீமேக் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.

இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்தது இயக்குனர்கள் மட்டுமல்ல பாட்ஷா படத்தின் ரசிகர்களும் தான். ஏனென்றால் இந்த படத்தை மறுபடியும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக இந்த படத்தை டிவியில் போட்டாலே எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படி மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டும்.

அப்படிப்பட்ட படத்தை ரீமேக் செய்து வெளியிடுவதற்கு சிக்கல் இருக்கிறது. ஆனாலும் இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி யாராவது ஒரு வெற்றி இயக்குனர் மறுபடியும் இந்த படத்தை ரீமேக் செய்து கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →