அந்த பேச்சே என்கிட்ட வேண்டாம்னு தலைவர் போட்ட ஆர்டர்.. வாலை சுருட்டி கொண்டு கப் சிப்பான லோகேஷ்

Thalaivar 171 update: சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் கடந்த இரண்டு வருடங்களாக ட்ரெண்டில் இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பொதுவாக ஒரு படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருப்பவர்கள் ஹீரோ அல்லது ஹீரோயின்.

அதை தாண்டி இயக்குனர்களுக்கு ரசிகர்களுக்கு கூட்டம் சேருவது என்பது தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ரொம்பவும் அரிதான விஷயம். அப்படி தனக்கென ஒரு பெரிய கூட்டத்தையே கூட்டி இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என பெரிய ஹீரோக்களின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கூடி லோகேஷுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து விட்டார் லோகேஷ்.

லியோ படம் இவருடைய ஹிட் லிஸ்டில் கொஞ்சம் தவறி போனது. இருந்தாலும் எதிர்பார்த்த வசூலை அள்ளிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லோகேஷ் உடன் இணைந்து பணி புரிய வேண்டும் என்பது ரொம்பவும் ஆசை.

பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் லோகேஷ் கமிட் ஆனார். ஜெய்லர் பட சமயத்தில் ரஜினி கதையில் அதிக தலையீடு காட்டி நெல்சன் திலிப் குமாரை தொந்தரவு செய்து விட்டால் என பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் அதற்கெல்லாம் கை மேல் பலனாக படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த மாதிரி விஷயத்தை லோகேஷ் கனகராஜ் இடம் ரஜினி செய்ய முடியாது, லோகேஷ் தன்னுடைய கதையில் வேறு யாருக்காகவும் மாற்றத்தை கொண்டு வர மாட்டார் என சொல்லப்பட்டது.

இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். யாருக்காகவும் அவர் கதையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டார். ஆனால் இப்போ மொத்தமாக ரஜினியிடம் சரண் அடைந்து விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் தான்.

வாலை சுருட்டி கொண்டு கப் சிப்பான லோகேஷ்

ஒரு வேளை லியோ படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தால் ரஜினி லோகேஷ் கைக்குள் இருந்திருப்பார். கிட்டத்தட்ட கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இப்போது நிலைமையை தலைகீழாகி விட்டது.

ரஜினி, லோகேஷ் இடம் அவருடைய எல் சி யு பிளான் எல்லாம் இந்த படத்திற்குள் வரக்கூடாது என ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு முக்கியமாக சொல்லப்பட்டது எல்சியூ தான்.

அந்த கதை இயல்பாக இல்லாமல் திணைக்கப்பட்டது போல் இருந்தது தான் படத்தின் தோல்விக்கு காரணம். எனவே ரஜினி சொல்வதை கேட்டு எல் சி யு வை தலைவர் 171 படத்தில் கொண்டுவர வேண்டாம் என கப்பு சிப்பு என்று ஆகிவிட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment