பொல்லாப்பு வேண்டாம்ன்னு ஒதுங்கி போகும் ரஜினி.. சுயசரிதையை வைத்து சூப்பர் ஸ்டார் போடும் தாழ்ப்பாள்

ரஜினி, லோகேஷ் கனகராஜின் கூலி படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தை விரைவாக முடிப்பதற்கு எல்லா திட்டமும் போட்டு வைத்து விட்டார். ஆனால் அந்த படத்திற்குப் பிறகு இவர் செய்யப் போகும் காரணத்தில் தான் பெரிய ரகசியம் அடங்கி இருக்கிறது.

ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கேரளா கோழிக்கோடில் நடைபெற்று வந்தது. அங்கே தான் டைகர் முத்துவேல் பாண்டியன் சம்பந்தமான காட்சிகளை எடுத்து வந்தார் நெல்சன். கடந்த ஏப்ரல் மாதமே ரஜினி அவ்வப்போது கேரளா சென்று வந்தார். அங்கே மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல வசூலில் சாதனை புரிந்தது முதல் பாகம். அதனால் இரண்டாம் பாகமும் அதை விட அதிக வசூல் பெற வேண்டுமென படத்தை மெருகேற்றி வருகிறார் நெல்சன் திலீப் குமார். மோகன்லால், சிவராஜ்குமார் போன்றவர்களுக்கு இந்த பாகத்தில் அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு ரஜினி 6 மாத காலம் ஓய்வெடுக்க போகிறாராம். தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதப்போவதால் ரஜினி 6 முதல் ஒரு 8 மாதங்கள்வரை சினிமாவிற்கு பிரேக் கொடுக்கிறார். ரஜினியின் இந்த திடீர் முடிவுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் காரணம் என்கிறார்கள்.

ரஜினியிடம் தங்களுக்கு டேட் கொடுக்கும் படி சுற்றி வருகிறார்கள் ரெட் ஜெயன்ட் நிறுவனம். 2026 ஆம் வருடம் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதனால் தேர்தல் நேரத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு படம் பண்ண வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார் ரஜினி. நமக்கு ஏன் பொல்லாப்பு என சுயசரிதை என பேச்சை மாற்றி பாலிடிக்ஸ் பண்ணுகிறார் ரஜினி.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →