சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

Lal Salaam Twitter Review: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தலைவர் மொய்தீன் பாயாக நடித்திருக்கும் லால் சலாம் இன்று ஆரவாரமாக வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஆரம்பத்தில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் ரஜினி நடிப்பது தான். கேமியோ ரோலாக இருந்தாலும் இது சூப்பர் ஸ்டாரின் படமாகவே பார்க்கப்படுகிறது. அதனாலயே இன்று முதல் காட்சியை காண ரசிகர்கள் தியேட்டர்களில் ஆர்வத்துடன் குவிந்தனர். தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்கள் பற்றி இங்கு காண்போம்.

கதையும் அதை இயக்குனர் காட்சிப்படுத்தியிருந்த விதமும் அற்புதமாக இருக்கிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோல் என்று சொல்லப்பட்டாலும் அது கொஞ்சம் நீட்டிக்கப்பட்டு படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது.

ஆனால் கதாபாத்திரங்களின் தேர்வு, சென்டிமென்ட் ஆகியவை மிஸ் ஆகி இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றமாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. இப்படி சில விமர்சனங்கள் வந்தாலும் இன்டர்வெல், கிளைமாக்ஸ், ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது.

மேலும் இரண்டாம் பாதி முழுவதும் ரஜினியின் ஆதிக்கம் தான். அதனால் அவர் கௌரவ தோற்றம் என்று சொல்ல முடியாது. அதிலும் அந்த சண்டை காட்சி ஃபயராக இருக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். ஆக மொத்தம் லால் சலாம் இந்த வருடத்தின் வெற்றிப்பட வரிசையில் இணைந்து விடும் எனவும் கருத்துக்கள் கூறுகின்றது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →