நடிகரின் டார்ச்சரால் நித்தியானந்தாவிடம் தஞ்சமடைந்த ரஞ்சிதா.. பூனைக்கு பயந்து புலி இடம் சிக்குவதா?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஞ்சிதா தன்னுடைய முதல் படத்தில் இருந்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருந்தார். இவருடைய அழகு, நடிப்பு, நடனம் எல்லாம் ரசிகர்களை கவர்ந்தது. ஹீரோயினாக நடித்த வந்த ரஞ்சிதா அதன் பிறகு துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

நித்யானந்தாவிடம் ரஞ்சிதா தஞ்சம் அடைந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதாவது அந்த ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு பணி செய்யும பெண்ணாக ரஞ்சிதா இருந்துள்ளார். அதன் பிறகு நித்யானந்தா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியது.

இந்நிலையில் ரஞ்சிதா ஏன் அங்கு சென்றார் என்ற காரணத்தை அவரே கூறியுள்ளார். அதாவது தன்னுடன் நடித்த நடிகரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் ஆன்மீகத்தில் இறங்க முடிவெடுத்தேன். அதனால் தான் நித்யானந்தாவிடம் சென்றேன் என்று ரஞ்சிதா கூறியுள்ளார்.

அதாவது நாடோடி தென்றல் படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சிதா நடிகர் அர்ஜூனுடன் இரண்டு, மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஜெய்ஹிந்த், கர்ணா போன்ற படங்களில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பொதுவாக அர்ஜுன் ஒரு சகலகலா வல்லவர்.

பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக், ரஞ்சிதாவை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தாராம். இதனால் எல்லாம் வெறுத்து போய் ஆன்மீகத்துக்கு சென்று விடலாம் என்று தான் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு ரஞ்சிதா சென்றாராம். இந்த விஷயத்தை பிரபல யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் இதை அப்போதே சொல்லாமல் இப்போது போய் அர்ஜுனால் தான் நித்தியானந்தாவிடம் சென்றேன் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்றும் பயில்வான் வினவுள்ளார். அதுமட்டும்இன்றி பூனைக்கு பயந்து புலியிடம் சிக்குவதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →