புரளியால் ராஷ்மிகா வைத்த செக்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Rashmika Mandanna : ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் அனிமல் படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் ராஷ்மிகாவை நாட தொடங்கியது. அதுவரை ரஷ்மிகாவின் சம்பளம் ஒரு படத்திற்கு ஒரு கோடியாக இருந்தது.

அதுவும் அனிமல் படத்திற்கு மட்டும் மூன்று கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. மேலும் இப்படம் விமர்சன ரீதியாக பல சிக்கலை சந்தித்தாலும் விருதுகளை வாங்கி குவித்தது. அனிமல் வெற்றியால் ஜெட் வேகத்தில் ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தி ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் கேட்கிறார் என்று கூறப்பட்டது.

அதாவது பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் நயன்தாராவே நாலு முதல் ஐந்து கோடி தான் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் குறுகிய காலத்தில் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சம்பளமா என திரை வட்டாரத்தில் பேச்சு தொடங்கியது. இது புரளி என்பதை தெளிவுபடுத்தி ராஷ்மிகா ஒரு செக்கும் வைத்திருக்கிறார். அதாவது மீடியாக்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

அதைப் பார்த்த பின் ஏன் சம்பளத்தை உயர்த்த கூடாது என்ற எண்ணம் தனக்கு தோன்றுகிறது. மேலும் என்னிடம் தயாரிப்பாளர்கள் ஏன் இவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள் என்றால், மீடியா தான் அப்படி சொல்கிறது வேறென்ன நான் செய்ய முடியும் என்று ராஷ்மிகா ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

இதன் மூலம் ராஷ்மிகா வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ராஷ்மிகா கேட்கும் சம்பளம் கொடுக்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்து தான் ஓடப் போகிறார்கள். மேலும் ரஷ்மிகா இப்போது புஷ்பா 2 மற்றும் சவ்வா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →