கல்யாணத்துக்குப் பின்னும் வரிசை கட்டும் இயக்குனர்கள்.. ரீ-என்ட்ரியிலும் அம்மணி பட்டையக் கிளப்புறாங்க

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தைப் பார்ப்பது, குழந்தையை கவனிப்பது என பொழுதை கழித்து வந்தார். மீண்டும் இவரை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

குழந்தைகள் வளர்ந்தவுடன் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார். இவர் நடிக்கும் எல்லா படங்களுமே ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரின் கணவரின் விருப்பப்படி டீசன்டான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தாலும் தற்போது குடும்பப்பாங்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் இவர் நடிக்கும் படங்களில் ஹீரோவுடன் நெருக்கம் காட்டும் சீன்கள் அறவே கிடையாதாம்.

குடும்பங்கள் இணைந்து பார்க்கும்படியான படங்களைத் தேர்ந்தெடுத்து இவர் நடிப்பதால் ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்துள்ளார். இதனால் இவர் படம் வெளியாகிறது என்றாலே குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் படை எடுக்கிறது. இதனால் இவர் படம் நல்ல வசூல் பெறுகிறது.

இதனால் பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் அம்மணியை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது அம்மணி அடுத்த படத்திலும் கமிட்டாகியுள்ளார். கூட்டு குடும்பம் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர் அம்மணியிடம் ஒரு அபாரமான கதையை சொல்லி கட்டிப் போட்டுள்ளார்.

அம்மணிக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போக உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் அம்மணி நடிப்பில் அடுத்த ஒரு குடும்பப் படம் வரக் காத்திருக்கிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →