மனைவியால் எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ்.. ரஜினிக்கு கிடைக்காத அந்த பாக்கியம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிசய பிறவி என்று கூட சொல்லலாம். சினிமாவில் அவர் அடையாத புகழே இல்லை. அதேபோன்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து பெரிய அளவில் ஜெயித்தது இவர் மட்டுமே. இவர் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தாலும் இன்று வரை அவரை மக்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் ஒரு கொடை வள்ளலாகவே அடையாளப்படுத்துகின்றனர்.

எம்ஜிஆர் மறைந்து கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவரைப் பற்றி பேசாத சினிமா கலைஞர்களே இல்லை. அவர் செய்த பல உதவிகள் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய சக கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் சாமானிய மனிதர்களுக்கு கூட அள்ளி, அள்ளி கொடுத்திருக்கிறார் மக்கள் திலகம்.

மக்கள் திலகம் எம்ஜிஆரின் கொடை குணத்துக்கு மற்றும் ஒரு காரணமாக சொல்லப்படுபவர் தான் அவருடைய மனைவி ஜானகி. காதல் திருமணம் புரிந்து கொண்ட ஜானகி என்றுமே எம்ஜிஆரின் முடிவுகளில் தலையிட்டது இல்லையாம் . அதுவும் அவர் மற்றவர்களுக்கு உதவி செய்ததை ஒருபோதும் அவருடைய மனைவி தடுத்ததே இல்லையாம் . அவர் கொடை வள்ளலாகவே வாழ்ந்ததற்கு ஜானகி ராமச்சந்திரன் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

எம்ஜிஆருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழோடு இருப்பவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பேரும், புகழோடும் இருக்கும் சூப்பர் ஸ்டார் அந்த அளவுக்கு ஜொலிக்க முடியாமல் போனதற்கு மிகப்பெரிய காரணமாக அவருடைய மனைவியை சொல்லுகிறார்கள். ரஜினிகாந்த் என்றுமே அவர் கட்டுப்பாட்டில் இருப்பதால் தன்னுடைய சொந்த ஆசைகளை செய்ய முடியாமல் இருக்கிறார்.

ரஜினிகாந்த்திற்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் லதா ரஜினிகாந்த் அதற்கு ஒரு போதும் சம்மதித்ததே இல்லையாம் . ஒரு முறை ரஜினிகாந்த் நலிந்தவர்களுக்கு உதவுவதற்காக ஆளுக்கு மூன்று சென்ட் என்று படப்பையில் மூன்று பேருக்கு இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் லதா ரஜினிகாந்த் அவர்களை நேரில் அழைத்து அந்த இடத்தின் பட்டாவை திரும்ப வாங்கிக் கொண்டாராம்.

அவருடைய மனைவியால் தான் ரஜினி யாருக்குமே எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறாராம் . ஒரு பொது மேடையில் பணம், புகழிருந்தும் நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று ரொம்பவும் வெளிப்படையாக சூப்பர் ஸ்டார் சொல்லி இருப்பார். அதற்கு காரணமே அவருடைய மனைவி மற்றும் மகள்கள் தான் என்று அவருடைய ரசிகர்கள் உட்பட எல்லோருமே சொல்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →