பொன்னியின் செல்வன் பார்த்து கடுப்பான விக்ரம்.. டீசர் வெளியீட்டுக்கு வராம இருக்க இதான் காரணமாம்

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் நடிகர் விக்ரம் மட்டும் அதில் பங்கேற்கவில்லை. இதனால் விக்ரமுக்கு இந்த படத்தில் நடித்தது பிடிக்கவில்லை என்றும், மணிரத்னம் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் சில வதந்திகள் பரவியது.

ஆனால் டீசரை பார்க்கும்போது விக்ரம் நடித்த காட்சிகள் தான் அதிகமாக இடம் பெற்றிருந்தது. இதிலிருந்து படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் விக்ரம் பொன்னியின் செல்வன் பட விழாவை புறக்கணித்தது எதனால் என்ற ஒரு கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த கோப்ரா பட விழாவில் விக்ரம் கலந்து கொண்டார். இதுவும் சில விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. உண்மையில் விக்ரம் பொன்னியின் செல்வன் பட விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராக தான் இருந்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு எதிர்பாராத விதமாக அன்று திடீரென நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்டும் மீடியாவில் வைரலானது.

அதன் பிறகு விக்ரமுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். பொன்னியின் செல்வன் பட விழாவில் அவர் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் விக்ரமுக்கு இந்த படத்தில் நடித்தது பிடிக்கவில்லை என்று பரவிய கதையால் தற்போது பட குழு கடும் அப்செட்டில் இருந்து வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →