மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி.. அவங்க இதுக்கு முன்னாடி எடுத்த படங்கள் பற்றி தெரியுமா?

தமிழ் திரையுலகில் 80ஸ் காலம் தான் சிறந்த காலமாக கருதப்படுகிறது. பாரதிராஜா, பாலச்சந்தர் என பெரும் இயக்குநர்கள் பல நல்ல படைப்புகளை கொடுத்த காலம் அது. அப்போது பல நடிகைகளும் அறிமுகமானார்கள். அப்படி அறிமுகமானவர் தான், நடிகை ரேவதி.

இவர் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன் நடித்து வெளியான மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புதுமை பெண், வைதேகி காத்திருந்தாள் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இவர் நடித்த தேவர் மகன் திரைபடத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம் படத்தில் மோகன் மற்றும் கார்த்தி உடன் அவர்கள் இருவருக்கும் இணையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி

ரேவதி முதன் முதலாக கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகம் ஆகினார். ஆங்கிலத்தில் ‘மிதிர் மை ஃப்ரண்ட்’ என்ற படமே இவரது முதல் படமாகும். இப்படம் சிறந்த ஆங்கில படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களையும் டைரக்டு செய்தார்.

தற்பொழுது தமிழில் ஒரு வெப் சீரிசை இயக்குகிறார். மேலும், இந்த வெப் சீரிஸ் பிரபல ஓ.டி.டி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளதாகவும் அவரது இன்ஸ்டா பக்கதில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ‘தலைவி Full Form-க்கு வந்துவிட்டார்’ என்று மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment