பாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு லுக்கை மாற்றிய ஆர் ஜே பாலாஜி.. ஒரு பக்கம் தில்லுமுல்லு ரஜினி மாதிரி இருக்காரே

தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமான ஆர் ஜே பாலாஜி தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்த வீட்ல விசேஷம் திரைப்படமும் ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்தது.

அந்த வரிசையில் அவர் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய திரைப்படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் பெயருக்கு ஏற்றவாறு ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் முடி அலங்கார நிபுணராக நடித்துள்ளார்.

இந்த கேரக்டருக்காக அவர் ஒரு மாதத்திற்கும் மேல் பயிற்சி எடுத்தாராம். அந்த வகையில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து ஆர் ஜே பாலாஜி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு லுக்கை மாற்றிய ஆர் ஜே பாலாஜி

rj balaji-actor
rj balaji-actor

அதில் அவர் இரு விதமான கெட்டப்புகளுடன் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் தாடி, மீசை போன்ற தோற்றத்தில் இருந்தார். தற்போது ஷூட்டிங் முடிந்து விட்டபடியால் அவர் தாடி, மீசை எல்லாம் எடுத்துவிட்டு ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு அசத்தலாக இருக்கிறார்.

இந்த போட்டோ தான் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலிவுட் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டதா என்று புகழ்ந்து பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கு இந்த தோற்றம் நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இதை அடுத்து ஆர் ஜே பாலாஜி முதன்முதலாக ஒரு திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ரன் பேபி ரன் என்ற அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கும் தற்போது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →