லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ்.. லோகேஷ்க்கு ட்ரீட் கொடுத்த புகைப்படம்

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்த படம், வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி விடுமுறையில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படம் லோகேஷின் எல்சியு கான்செப்டில் உருவாகிறதா இல்லையா என்பது குறித்த எந்த தகவலும் இப்போது வரை வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள், லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ் புகைப்படத்தை உருவாக்கி, அதை லோகேஷ்க்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில் ட்ரெண்டாகிறது.

லியோ டைட்டில் புரோமோவில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை நினைவுபடுத்தும் விதத்தில் ஸ்கார்ப்பியன் டாட்டூஸ் இடம் பெற்றிருந்தது. இதனால் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் லியோ படத்தில் இடம்பெறும் என்று ரசிகர்கள் முழுமையாக நம்பி விட்டனர். இதனால் லியோவும் ரோலக்ஸும் ஒரே காரில் ஆக்சன் ட்ரீட் கொடுக்கும் புகைப்படத்தை சித்தரித்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வைரல் ஆக்கியுள்ளனர்.

மேலும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் ப்ரோமோ வீடியோ மாடலில் இருந்ததால், கிளைமாக்ஸில் என்ட்ரி கொடுத்த ரோலக்ஸ் சூர்யாவும், விஜய்யுடன் மோதலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

மேலும் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ்காரராக நடித்திருந்த ஜார்ஜ் மரியான், விக்ரமில் ஏஜென்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோ படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் ரோலக்ஸும் இருந்தால் படம் தாறுமாறாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

மேலும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ரோலக்ஸ், லியோ இருவரும் ஒரே காரில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படம்  ஃபேன்மேட் போஸ்டராக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் இந்த சீன் உண்மையாக இருந்தால் தரமாக இருக்கும் என்ற ஹைப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களின் இந்த கனவு பழிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லியோவுடன் கார் சேசிங்கில் மாஸ் காட்டும் ரோலக்ஸ்

leo-rolex-cinemapettai
leo-rolex-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →