பாலிவுட்டுக்கு தாவிய rowdybaby.. அதிர்ந்துபோன திரையுலகம்

Sai pallavi : சினிமாவில் தன் ஆடையில் கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரே நடிகை சாய் பல்லவி தான்.

தமிழ் நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். இதற்குப் பிறகு பல தெலுங்கு படங்களிலும் அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார்.

ஒரு நடிகை என்றால் நிச்சயம் நெகட்டிவ் விமர்சனம் இருக்கும் ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும்தான் சினிமாவில் இதுவரையிலும் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் விமர்சனம் என்பதே கிடையாது. அந்த அளவிற்கு தன் உடையிலும், நடத்தையிலும் கவனம் செலுத்தி வரும் ஒரே தமிழ்நாடு சாய் பல்லவி மட்டுமே.

முகுந்தன் என்ற ராணுவ வீரரை மையமாக வைத்து படம் எடுக்கலாம் என்று ராஜ்குமார் பெரியசாமி ஆலோசனை செய்த வேலையில் யார் அவர் மனைவி கதாபாத்திரத்திற்கு செட் ஆவார் என்று யோசிக்கையில், முதலில் சாய்பல்லவி தான் ஞாபகத்துக்கு வந்தாராம். சிவகார்த்திகேயன் முகுந்தன் கதாபாத்திரத்திலும், இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் இணைந்து நடித்து 2024 அமரன் படத்தை பயங்கரமான பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தனர்.

அதற்குப் பிறகுதான் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கும், சாய்பல்லவிக்கும் தொடர் பட வாய்ப்புகள் குவிந்தது. தன்னடக்கமும், கலாச்சாரத்தையும் பின்பற்றும் சாய் பல்லவிக்கு குடும்ப கதாபாத்திரங்களும் வரத் தொடங்கியது.

இந்நிலையில் ஒரு மாற்றத்திற்காக திடீரென பாலிவுட்டுக்குத் தாவினார் சாய்பல்லவி. #EKdin என்ற திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக ஜூனைத் கான் என்பவர் நடிக்கிறார். இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி திரையில் வர இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →