5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. காரணம் கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க!

ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சரத்குமார், அதன் பிறகு 90களில் டாப் நடிகராக வலம் வந்தார். இப்போது  முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் 2 இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையினர் மார்க் குறைவாக எடுத்தால், காதல் தோல்வி அடைந்தால் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகிறீர்கள். இந்த உலகத்திற்கு நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள மட்டும் பல ஆண்டுகள் எடுக்கும்.

ஆகையால் வாழ்க்கையை உணர்ந்து சிறப்பாக வாழ வேண்டும்.  அப்படியெல்லாம் பார்த்தால் நான் பலமுறை தற்கொலை செய்து இருக்க வேண்டும். ஏனென்றால் சரத்குமார் தற்போது ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தில் எப்படி நடித்தார், எப்படி வாய்ப்பு வந்தது என்று கூறினார்.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார். ‘நான் சொந்த படம் எடுத்து நஷ்டமாகி அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டு வெறும் ஐந்து ரூபாயுடன் நடுரோட்டில் நின்றேன். பயணம் செய்வதற்கு கூட காசு இல்லாமல் பயந்து பயந்து பஸ்ஸில் செல்வேன். அப்போது நடுராத்திரியில் என் நண்பன் ஒருவன் 150 ரூபாய் கொடுத்து உதவி செய்தான்.

அதன்பின் படிப்படியாக ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி இப்போது ஒரு நல்ல நிலையில் இருந்து வருகிறேன். ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் தற்கொலை என்ற பெயரில் பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் செல்கிறார்கள். இது தவறான விஷயம். அந்த பிரச்சனை எப்படியும் நம்மளை விட்டு சென்று விடும், அதனால் தைரியமாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →