தனுஷை விட்டா இவர்தான் என் சாய்ஸ்.. சேகர் கம்முலா யாரை குறிவைத்தார்?

தெலுங்கு சினிமாவில் உணர்ச்சிப் பூர்வமான கதைகளுக்குப் பிதாமகனாக திகழ்பவர் இயக்குநர் சேகர் கம்முலா.ஹாப்பி டேய்ஸ்’, ‘அனாமிகா’, ‘லீடர்’ போன்ற படங்களின் மூலம் அவர் திரைப்பட ரசிகர்களிடம் உறுதியான இடத்தை பிடித்திருக்கிறார்.

அண்மையில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை கொண்டு இயக்கிய ‘குபேரா’, கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், தெலுங்கில் நல்ல வசூல் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது, படக்குழுவிற்கு ஏமாற்றமளித்தது. இதனால், பிளாக்பஸ்டர் ரேஞ்சை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், ‘குபேரா’ படத்தின் மூலம் சேகர் கம்முலா தனது திரைப்பயணத்தில் முக்கிய வெற்றியை பதிவு செய்தார். இது அவரது முதல் 100 கோடி வசூல் படமாகவும், இருமொழி திரைப்படமாகவும் வெற்றி பெற்றதோடு, இயக்குனராக இரண்டு முக்கிய படிகள் உயர்ந்த புள்ளியையும் காட்டுகிறது.

சேகர் கம்முலா-நானி கூட்டணி 

இதையடுத்து, ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. “அடுத்ததாக யாருடன்?” என்ற கேள்விக்கு குபேரா ப்ரமோஷன்களில் அவர், “தனுஷை விட்டால், நானியே எனது அடுத்த தேர்வு” எனத் தெரிவித்தார். குடும்பத் தோழமை படங்களில் தனுஷ் முதலிடம் பிடித்திருந்தால், நானி அடுத்த பிளான், என்று அவர் குறிப்பிட்டது ரசிகர்களிடம் பெரும் ஹைப்பை ஏற்படுத்தியது.

நானி தற்போது ‘பாரடைஸ்’, ‘OG’, மற்றும் வெங்கி அட்லூரி இயக்கும் படங்களில் பிஸியாக உள்ள நிலையில், இயக்குநர் சேகர் கம்முலா தனது அடுத்த படத்திற்கான பணிகளை செம்மையாக தொடங்கியுள்ளார்.

எப்போதும் போலவே, எளிமையான வாழ்வின் உணர்ச்சிகளை வெளிக்கொணரும் கதையைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில், முக்கிய வேடத்தில் நானி நடிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தனது ஸ்டைலில் ஹார்ட் டச்சிங் கதை – நானியின் நடிப்பில்!” என்ற இந்த கூட்டணியால் ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →