தமிழில் படம் இயக்க பிடிக்கவில்லை.. விரக்தியில் ஆவேசமாக பேசிய செல்வராகவன்

செல்வராகவன், தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் ரிலீசான நிலையில், இத்திரைப்படத்திற்கு பல கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நடிகர் தனுஷ் எப்படியாவது தமிழ் சினிமாவில் மீண்டும் உச்சத்தில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவனின் நானே வருவேன் திரைப்படம் தனுஷிற்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் தனுஷின் இரட்டை வேட நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் திரைப்படத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்களை படித்து விட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மாற்று சினிமாக்களை பல இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். ஆனால் தமிழில் அது இன்னும் மாறவில்லை என்றும் வடமாநிலங்களில் பக்கவாட்டு சிந்தனையுடன் பேரலல் உலகின் கதைக்களத்தை எடுத்து வருகிறார்கள். ஆனால் 13 வருடம் தமிழ் சினிமாவில் நான் கால் பதித்த நாள் முதல் இந்த நிலை இங்கு மாறவில்லை என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் படம் இயக்கவே தனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லை என்றும் பளிச்சென்று செல்வராகவன் ஆவேசமாக பேசியுள்ளார். செல்வராகவன் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவரது இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாகவே செல்வராகவனின் திரைப்படங்கள் ரிலீசாகும் தருவாயில் அதிகம் பேசப்படாது. ஆனால் 20 அல்லது 10 ஆண்டுகள் கழித்து திரைப்படத்தின் மேக்கிங் பற்றி பலரும் ஆச்சரியத்துடன் பேசுவர். அப்படிப்பட்ட திரைப்படங்கள்தான் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆகும்.

இந்நிலையில் செல்வராகவனின் நானே வருவேன் திரைப்படம் தற்போது ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கண்டிப்பாக பிற்காலத்தில் இத்திரைப்படத்தில் செல்வராகவன் போட்ட உழைப்பைப் பற்றி பலரும் பேசுவார்கள் என்று நானே வருவேன் திரைப்படத்தை பார்த்த சிலர் தெரிவித்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →