பணத்துக்கு ஆசைப்படாத செந்தில்.. சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் மறுத்த சம்பவம்

Rajini – Senthil : கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போவில் வெளியாகும் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு செந்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் செந்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செந்தில் ரஜினியுடன் பழகியதைப் பற்றிய அனுபவங்களை கூறியிருந்தார். ரஜினியின் பெரும்பாலான படங்களில் செந்தில் அப்போது நடித்திருப்பார்.

இந்நிலையில் ஒருமுறை ராகவேந்திரா மண்டபத்தில் எதர்ச்சையாக ரஜினியை செந்தில் சந்தித்திருக்கிறார். அப்போது ரஜினியே முன்வந்து என்னை வைத்து ஒரு படத்தை தயாரியுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் அப்போது ரஜினியை வைத்து செந்தில் படம் எடுக்கவில்லையாம்.

பணம் மீது தனக்கு ஆசை இல்லை என்றாலும் ரஜினி தாமாக கொடுத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டோமோ என்ற வருத்தம் மட்டும் இருப்பதாக செந்தில் கூறி இருக்கிறார். மேலும் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார் என்ற காரணத்தினால் மட்டும் ரஜினி லால் சலாம் படத்தில் நடிக்கவில்லை.

கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டும் தான் ரஜினி எப்போதுமே படங்களில் நடிப்பார். அந்த வகையில் லால் சலாம் படத்தில் ரஜினியின் மொய்தீன் பாய் கதாப்பாத்திரம் சிறப்பாக உள்ளதால் மட்டும் தான் ரஜினி நடித்துள்ளார் என செந்தில் கூறியிருக்கிறார். மேலும் லால் சலாம் படம் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →