ரஜினிக்கு நன்றி கடன் பட்டுள்ள ஷாருக்கான்.. Jailer-2வில் நெல்சனின் தரமான சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர்-2 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். 74 வயதிலும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை காப்பாற்றும் முழு பொறுப்பை ரஜினி ஏற்றுள்ளார். ஏனென்றால் தளபதி விஜய் ஒருபுறம் அரசியலுக்கு சென்று விட்டார், அஜித் வருடத்திற்கு ஒரு படம்தான் என்று தீர்மானமாக உள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்-2 படத்தில் ஷாருக்கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ரஜினிக்கு நன்றி கடன் பட்டுள்ள ஷாருக்கான் இதை உடனே ஒப்புக்கொண்டு உள்ளாராம்.

ஏனென்றால் தென்னிந்தியாவில் ‘Ra One’ படம் ஓடணும்னா ரஜினி அல்லது கமல் கண்டிப்பாக அந்த படத்துல நடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை அப்போது ஷாருக்கான் கமலின் தீவிர fan-கா இருந்தாலும் ரஜினியை நடிப்பதற்கு கேட்டு உள்ளார்.

எந்த ஒரு தயக்கமும் காட்டாத ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த கேமியோ கதாபாத்திரத்திற்கு சம்பளம் கூட வாங்கவில்லை தலைவர். இந்த ஒரே காரணத்திற்காக ஷாருக்கான் ஜெயிலர்-2 படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

PAN இந்தியா படமாக உருவாகும் ஜெயிலர்-2 பாலிவுட்டில் ஹிட் அடிப்பதற்காக நெல்சன் இதுபோன்ற சம்பவத்தை செய்து வருகிறார். ஏற்கனவே கூலி படத்தில் அமீர்கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கண்டிப்பாக லோகேஷ் கூட்டணியில் கூலி படம் 1000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல எதிர்பார்ப்பு தற்போது நெல்சனின் ஜெயிலர்-2 படத்திற்கும் இருப்பது ரஜினிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்க வைப்பதற்காக ரஜினி பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தற்போது வரை நம்ம சினிமாவை நம்ம தான் காப்பாத்தணும்னு ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் ரஜினி. அனிருத் இசையில் இன்று கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தை மிரட்ட வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →