அங்க புடிச்சி இங்க புடிச்சி கடைசில கிளிக் ஆச்சி.. சாந்தனுவின் கடைசி பிளான்

நடிகர் சாந்தனு என்று சொன்ன உடன் நம்மளில் பலருக்கு அவரது மருதாணி பாடல் தான் ஞாபகம் வரும். ஆனால் அந்த படத்தை தவிர, அவருக்கு வேறு எந்த படமும் சொல்லிகொள்ளும் வெற்றியை கொடுக்கவில்லை. இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ், அந்த காலத்தில் பல பிளாக்பஸ்டர்களை கொடுத்தவர். அவரது மகன் என்ற அடையாளத்தோடு சாந்தனு வந்தாலும், அவர் சிறப்பாகவே நடித்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படி இருக்க, மாஸ்டர் படத்தில் இவரது நடம் மூலம் மீண்டும் தன்மீது கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ப்ளூ ஸ்டார் படம், இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சற்று தோய்வை சந்தித்தது.

மலையாளம் பக்கம் தாவிய பாக்யராஜ் மகன்..

இப்படி இருக்க இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சாந்தனு, தனது யூட்யூப் சேனலில் கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமின்றி, பல வேறு மொழி படங்களாவது அமையுமா என்று எதிர்பார்த்தார்.

அப்படி தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளில் முயற்சி செய்தும் இவர் எதிர்பார்ப்பது போன்ற கதை அமையாத காரணத்தினால், மலையாளம் பக்கம் தாவி உள்ளார்.

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் புதிய படமொன்று மலையாளத்தில் தயாராக உள்ளது. இந்த படத்தில் ஷானே நிகம், கதாநாயகனாக நடிக்கிறார். ஹீரோயினாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அன்ஷு நடிக்கிறார். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனுவும் நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து, மலையாள படங்களில் நடிக்கும் எண்ணத்தில் அவர் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அங்கு அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமா நம் தமிழ் மக்களும் படம் பார்த்து வரவேற்பை கொடுப்பார்கள். தொடர்ந்து அது தமிழ் என்ட்ரிக்கான ஒரு அடித்தளமாகவும் இருக்கும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment