வலிமை கூட்டணி தொடருமா.? H. வினோத் புரமோசனுக்கு வராததன் அதிர்ச்சி பின்னணி

வலிமை படம் நேற்று திரையிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் படம் பிளாக்பஸ்டர் என்று கொண்டாடி வருகிறார்கள். சமமான ஆடியன்ஸ் படம் ஆவரேஜ் என்றும், ஒருமுறை பார்க்கலாம் என்றும் கூறிவருகின்றனர்.

நேற்று கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. ஆனால் படம் திரையிடுவதற்கு முன் அந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஹெச் வினோத் அதிகமாக நாட்டம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இவரும் அஜித் பாலிசியை கடைப்பிடிக்கிறார். அஜித்தை போல இவரும் அமைதியாக இருந்து வருகிறார் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் போனி கபூரின் வற்புறுத்தலின் பெயரில் தான் இவர் ஒரு சில இடங்களுக்கு பட புரமோஷனுக்காக வந்துள்ளார். அப்போது கூட மேடையில் அதிகளவு பேசாமல் படம் நன்றாக வந்திருக்கிறது, எல்லோரும் நல்ல நடித்திருக்கிறார்கள் என்று சொல்லிய பின் உடனே அமர்ந்து விடுவார்.

ஹெச். வினோத் நடந்துகொண்ட விதத்திலிருந்து அவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவது பிடிக்கவில்லை என அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

வலிமை படத்தில் நிறைய எடிட்டிங் ஒர்க் நடந்திருக்கிறது. வினோத்தின் அனுமதி இல்லாமல் நிறைய மாற்றங்களும் செய்யப்பட்டனவாம். எல்லாவற்றுக்கும் மேலாக வினோத் சுதந்திரமாக செயல்பட விரும்பும் ஒரு இளம் இயக்குனர்.

அவர் வலிமை படத்தில் அதிகளவு நாட்டம் காட்டாமல் இருப்பது இப்பேர்ப்பட்ட செயல்களால் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த படத்திலும், எச் வினோத், போனிகபூர் மற்றும் அஜித் சேர இருக்கிறார்கள்.

உண்மையில் வலிமை படத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இவர்கள் அடுத்து இணைவது சிக்கலாக இருக்கும். இவர்களின் அடுத்த புராஜெக்டை பொருத்தே உண்மை நிலவரம் வெளியே வரும்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →